உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சன் யூவுடன் மோதினார்.

இதில், ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சிந்து, 39 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அவர், 21-14, 21-9 என்ற நேர் செட்களில் சன் யூவை வீழ்த்தினார்.

சிந்து தனது அரையிறுதியில் சீன வீராங்கனையான சென் யூஃபெய்யை சந்திக்கிறார்.

சிந்து ஏற்கெனவே இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது கொசுறு தகவல்.