சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் சிந்து 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆனால், முதல்நிலை வீரரான சாய்னா 5 இடங்களை இழந்து 11-வது இடத்திற்கு சென்றுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான சிந்து, கடந்த வாரம் நடைபெற்ற சீன ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

அதேநேரத்தில் காயத்திலிருந்து மீண்டுள்ள முன்னாள் முதல் நிலை வீராங்கனையான சாய்னா பெரும் சரிவைச் சந்தித்துள்ளார். அவர் 5 இடங்களை இழந்து 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 4 இடங்கள் முன்னேறி 19-ஆவது இடத்தையும், எச்.எஸ்.பிரணாய் 2 இடங்கள் முன்னேறி 25-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சீன ஓபனில் பங்கேற்காதபோதும் தரவரிசையில் தனது இடத்தை (12) தக்கவைத்துக் கொண்டார் ஸ்ரீகாந்த்.