Sindh in the quarterfinal leg version of Neil

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து தனது 2-ஆவது சுற்றில் 21-12, 21-4 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் டினார் தியாவைத் வீழ்த்தினார்.

மற்றொரு 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் 21-8, 21-10 என்ற நேர் செட்களில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்தார்.

சாய்னாவும், சிந்துவும் தங்களின் காலிறுதி ஆட்டங்களில் வென்றால், இருவரும் அரையிறுதியில் மோதிக் கொள்வர்.