sincere cricket fan got cardia arrest in surat

இந்தியா,இலங்கை,பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் இந்திய அணிகள் மோதின.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

20 ஓவர்களில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி வெற்றிக்கு கடைசி நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து வெற்றியை இந்திய அணிக்கு பறித்துக் கொடுத்தார்.

வெற்றிக்கு வரமாக வந்தார் தினேஷ் கார்த்திக்

வெற்றிக்கு வரமாக வந்தார் தினேஷ் கார்த்திக், கடைசி பாலில்,சிக்ஸர் அடித்து ஐந்தியாவின் வெற்றியை உறுதி படுத்தினார்.இந்த ஒரு தருணத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்க வைத்தது

இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் (29),

இந்நிலையில், சூரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் மிகவும் ஆர்வமாக கிரிக்கெட் பார்த்துள்ளார்.

அப்போது கடைசி பந்தில் இந்தியா வெற்றி பெறுமா என்ற அழுத்தத்தில் இருந்த அவர், தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸரை பார்த்து இந்த அதிர்ச்சி அடைந்த அவர் அப்படியே உயிரை விட்டார்.

அந்த இன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார் இந்த ஆசிரியர்.