Shenzhen Challenger Indian pair wins championship by defeating American pair

ஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்க இணையை வீழ்த்தி இந்தியாவின் விஷ்ணு வர்தன் - ஸ்ரீராம் பாலாஜி இணை வாகைச் சூடியது.

ஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்றது. இதன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணு வர்தன் - ஸ்ரீராம் பாலாஜி இணை, போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் - ஜேக்சன் வித்ரோ இணையுடன் மோதியது.

இதில், 7-6(3), 7-6(3) என்ற செட் கணக்கில் ஆஸ்டின் கிராஜிசெக் - ஜேக்சன் வித்ரோ இணையை வீழ்த்தி வாகைச் சூடியது.

2017-ஆம் ஆண்டில் இந்த இணை வெல்லும் 3-வது சேலஞ்சர் பட்டமாகும். இந்த பட்டத்தை வென்றதன் மூலம் விஷ்ணு - பாலாஜி இணைக்கு தலா 90 தரவரிசை புள்ளிகள் கிடைத்துள்ளன. அத்துடன் ரூ.48 இலட்சம் ரொக்கப் பரிசையும் இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.