சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு புதிய மைல்கல்லை எட்டும் கோலி, அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற தீராத வேட்கை கொண்டவர். 

அணிக்கு வெற்றியை தேடித்தருவதில் மிகத்தீவிரமானவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் அவரது அர்ப்பணிப்பும், அவரது உழைப்பு, போராடும் குணம் மற்றும் ஈடுபாடு ஆகியவை வியக்கத்தக்கவை. ஒரு கேப்டனாக அவரது ஆட்டம், மற்ற வீரர்களுக்கு பொறுப்பை அதிகரித்து உத்வேகத்தை அளிக்கக்கூடியது. 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்கிறார். பல முன்னாள் ஜாம்பவான்களின் ஆல்டைம் சிறந்த வீரர் தேர்வாக விராட் கோலி உள்ளார். 

விராட் கோலியின் கேப்டன்சி குறித்த சில விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஈடுபாடு, அர்ப்பணிப்பு, வெற்றி வேட்கை, உழைப்பு ஆகியவற்றில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

விராட் கோலியின் தீவிர ரசிகர் என்று தன்னை கூறிக்கொள்ளும் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, விராட் கோலி மிகச்சிறந்த அணி தலைவர் என்று பாராட்டினார். மேலும் விராட் கோலி மிகச்சிறந்த வீரர். அவர் பேட்டிங் ஆடுவதையும் அவர் பேசுவதையும் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகன். விராட் கோலி அவரது நம்பிக்கையின் மீது உறுதியாக இருந்து அதன்படியே செயல்படுகிறார். அவர் மனதில் நினைப்பதை எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக பேசுகிறார். உண்மையாக இருக்கிறார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி உண்மையாக இருக்கும் அவரது குணம்தான் அனைவரையும் அவரை விரும்பவைக்கிறது என்று விராட் கோலியை புகழ்ந்து தள்ளியிருந்தார்.

இந்நிலையில், சுழல் ஜாம்பவானான ஷேன் வார்னே, விராட் கோலியின் கெத்தை ஏற்றிவிட்டுள்ளார். விராட் கோலி குறித்து பேசிய ஷேன் வார்னே, விராட் கோலி தனது கெரியரில் சிறந்து விளங்கும் சமயத்தில் நான் பந்துவீசியிருந்தால் எனது பந்தை பறக்கவிட்டிருப்பார். நான் அவரை ஓரிரு முறை வீழ்த்தியிருப்பேன் என்றாலும் அவருக்கு நான் பந்துவீசும் போட்டிகளில் எல்லாம் அவர் அடித்திருப்பார் என்றே கருதுகிறேன் என்று கோலியின் கெத்தை ஏற்றிவிட்டுள்ளார்.