Asianet News TamilAsianet News Tamil

2 மாசம் வீட்டுல உட்கார்ந்து என்ன பண்றது..? கோலி பேசுறது கொஞ்சம்கூட சரியில்ல.. தெறிக்கவிட்ட சேவாக்

அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 
 

sehwag contradicts with indian skipper virat kohli opinion
Author
India, First Published Nov 11, 2018, 10:42 AM IST

அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 

உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதும் முதல் போட்டி ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் முடிந்து உலக கோப்பையில் இந்திய அணி  மோதும் முதல் போட்டிக்கு இடையே 15 நாட்கள் இடைவெளி இருக்கிறது. 

இதற்கிடையே உலக கோப்பையில் ஆடும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் கோலி பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஐபிஎல்லில் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்து, அதனால் உலக கோப்பையில் ஆட முடியாத சூழல் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கு ஐபிஎல் சீசன் முழுவதும் விலக்கு அளிக்க வேண்டுமென கோலி கோரிக்கை விடுத்திருந்தார். 

sehwag contradicts with indian skipper virat kohli opinion

ஆனால் ரோஹித் சர்மா, கோலியின் கருத்திலிருந்து முரண்பட்டார். அதேபோல ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கோலியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. 

இந்நிலையில், கோலியின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், 2 மாதம் வீரர்கள் ஆடாமல் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்யப்போகிறார்கள்? வீரர்கள் காயமடைந்திருந்தாலோ அல்லது முழு உடற்தகுதியில் இல்லாமல் இருந்தாலோ இதுபோன்ற கோரிக்கையை வைக்கலாமே தவிர வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்கும்போது போட்டிகளில் ஆடலாம் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios