Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியாவை வீழ்த்தணுமா..? இத மட்டும் செய்யுங்க போதும்.. இந்திய அணிக்கு சேவாக் கொடுக்கும் ஐடியா

ஸ்மித்தும் வார்னரும் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியை சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம் என்று இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சேவாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

sehwag advise to indian team to beat australia in their soil
Author
India, First Published Nov 10, 2018, 3:22 PM IST

ஸ்மித்தும் வார்னரும் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியை சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம் என்று இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சேவாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்துகிறதே தவிர வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்துவதன் மூலம் இந்திய அணி தனது பலத்தை நிரூபிக்க முடியும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு பலமாக அமையும் எனவும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். 

sehwag advise to indian team to beat australia in their soil

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமையாது. ஏனெனில் அவர்கள் சொந்த மண்ணில் ஆடுகிறார்கள். தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அதிகமாக ஆடிய அனுபவம் இல்லாதவர்கள் என்றாலும் அதிகமான முதல்தர கிரிக்கெட்டில் ஆடியவர்கள் என்பதால் இந்திய அணிக்கு கடும் சவாலாக திகழ்வார்கள் என்று சேவாக் எச்சரித்துள்ளார். 

sehwag advise to indian team to beat australia in their soil

மேலும் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த சேவாக், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என எந்த நாட்டிலும் சிறப்பாக ஆடி வெற்றியை பறிக்கும் திறமை பெற்ற அணி. ஆனால் அதற்கு முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி ஆதிக்கம் செலுத்த வேண்டும். அப்படி ஆடினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தலாம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios