secret of success of mahendra singh dhoni
இந்திய முன்னாள் கேப்டன் தோனி, ஒரு கேப்டனாக வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
இருமுறை ஐபிஎல் தொடரை வென்ற சென்னை அணி, அதிகமான முறை இறுதிப் போட்டியிலும் ஆடியுள்ளது. ஆனால் சூதாட்டப் புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி விளையாடவில்லை.
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் இந்த ஆண்டு மீண்டும் சென்னை அணி களமிறங்குகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு தோனியின் கேப்டன்சிதான் என்பதை அனைவரும் அறிந்ததே. கேப்டனாக தோனி, வெற்றி பெற என்ன காரணம் என்பது குறித்து அந்த அணியின் வீரர் பத்ரிநாத் மனம் திறந்துள்ளார்.
தோனியின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள பத்ரிநாத், ஒவ்வொரு வீரரையும் சுயமாக அவர்களின் விருப்பம்போல விளையாட தோனி அனுமதிப்பார். இதுதான் ஒரு கேப்டனாக தோனி ஜொலிக்க காரணம். மேலும் அவரது ஃபினிஷிங் திறமை. ஆட்டத்தை முடிப்பதில் தோனி வல்லவர். அதுவும் தோனியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என பத்ரிநாத் கூறியுள்ளார்.
