Saurabh current champion advanced to the main round of the stunning
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் செளரப் வர்மா, மிஷா ஜில்பெர்மனை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைப்பெற்று வருகிறது.
இதன் முதல் சுற்றில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்தின் பன்னாவிட் தோங்னுவமை சந்தித்த இந்தியாவின் சௌரப் 27-29, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்த அடுத்தச் சுற்றில் இஸ்ரேலின் மிஷா ஜில்பெர்மனை 21-13, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முக்கியச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டார்.
இந்தியாவின் நடப்புச் சாம்பியனான சௌரப் இன்று நடைபெறவுள்ள முக்கியமானச் சுற்றில் இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா கிங்டிங்குடன் மோதிகிறார்.
அதேபோன்று இப்போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் அர்ஜூன் -ராம்சந்திரன் ஷ்லோக் இணை பிரதான சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
