சந்தோஷ் டிராபி போட்டியின் அரையிறுதியில் கர்நாடக அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் கால் பதித்தது மேற்கு வங்கம்.

தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான சந்தோஷ் டிராபி போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் மேற்கு வங்க அணியின் கேப்டன் ஜிதன் முர்மு, தீர்த்தங்கர் சாரக்கர் ஆகியோர் இரண்டாவது பாதியில் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே கோல் எதுவும் பதிவு செய்யவில்லை என்பது கொசுறு தகவல்.

ஆனால், 2-வது பகுதி ஆட்டத்டின் 57-வது நிமிடத்தில் ஜிதன் முர்மு முதல் கோலைப் பதிவு செய்தார். இறுதிகட்டத்தில் அந்த அணியின் மற்றொரு வீரரான தீர்த்தங்கர் சாரக்கர் 2-வது கோலைப் பதிவு செய்தார்.

இதனிடையே, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் மிசோரமை வீழ்த்தியது. 

நடப்பு சாம்பியனான மேற்கு வங்கம், கேரளத்துடன் ஏப்ரல் 1-ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் சந்திக்கிறது.