Asianet News TamilAsianet News Tamil

தோனியை பற்றி அதிரடியாக பேசிய முன்னாள் வீரர்!! ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான தோனி தற்போது ஃபார்மில்லாமல் தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை ஆகியவற்றில் சோபிக்கவில்லை. அதனால் கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொண்டுவருகிறார். 
 

sanjay manjrekar opinion about ms dhoni
Author
India, First Published Sep 30, 2018, 3:41 PM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான தோனி தற்போது ஃபார்மில்லாமல் தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை ஆகியவற்றில் சோபிக்கவில்லை. அதனால் கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொண்டுவருகிறார். 

ஏற்கனவே இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நிலவிவரும் நிலையில், தோனி சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து சொதப்பிவருகிறார். உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால் தோனி மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியம்.

தோனியின் பேட்டிங் மீது விமர்சனங்கள் எழும்போதெல்லாம் மீண்டும் சிறப்பாக ஆடி தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. அதேபோன்றதொரு பதிலடியையும் இப்போதும் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

sanjay manjrekar opinion about ms dhoni

தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அவரது அனுபவம், அணிக்கு தேவை. கேப்டனுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் போட்டியின் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் தருணங்களை ஏற்படுத்தி கொடுக்கின்றன. எனவே பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அனுபவ வீரர், இந்திய அணியின் வெற்றிகரமான அனுபவமான முன்னாள் கேப்டன் என்ற முறையில் 2019 உலக கோப்பை வரை தோனி ஆட வேண்டியது அவசியம்.

இந்நிலையில், தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், தற்போதைய சூழலில் தோனி சிறந்த ஃபினிஷராக இல்லை. அவர் தற்போது பேட்டிங் சரியாக ஆடவில்லை. எனவே ரசிகர்கள் தோனியின் மீதான எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

sanjay manjrekar opinion about ms dhoni

மேலும், தோனி ஒரு மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். தோனி நம்பத்தகுந்த விக்கெட் கீப்பர். அவரது ஆலோசனை அணியின் கேப்டனுக்கு தேவை. விராட் கோலிக்கு ஒரு கேப்டனாக உலக கோப்பை தொடர்பான அழுத்தம் உள்ளது. எனவே தோனி அணியில் இருப்பது கோலிக்கு தைரியத்தை கொடுக்கும். அதேநேரத்தில் தோனிக்கு சரியான மாற்று இருக்கும்பட்சத்தில் அவரையும் அவ்வப்போது பயன்படுத்திவர வேண்டும் என சஞ்சய் மஞ்சரேக்கர் வலியுறுத்தியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios