மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா - ஸ்விட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி கடும் போராட்டத்திற்குப் பிறகு 7-6 (10), 7-5 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஹாவ் சிங் சான்-யங் ஜன் சான் ஜோடியைத் தோற்கடித்தது. இந்த வெற்றியில் மூலம் அந்த ஜோடி அரையிறுதியில் கால் பதிப்பதை உறுதி செய்தது.

சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா - எலினா வெஸ்னினா ஜோடியை சந்திக்கிறது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.