samjay manjrekar praised ganguly and rahul dravid

கங்குலியும் டிராவிட்டும் இந்திய அணியில் இடம்பெற்றவுடன் ஆடிய ஆட்டத்தை பார்த்தபோதே இனிமேல் தனக்கு இந்திய அணியில் இடமில்லை என்பதை உணர்ந்துவிட்டதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர். இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்திய அணிக்காக 37 டெஸ்ட் மற்றும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

மஞ்சரேக்கர், தனது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். IMPERFECT என்ற அந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், 1996 இங்கிலாந்து தொடரில் கங்குலியை தேர்வு செய்ய வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஏனென்றால் உள்ளூர் போட்டிகளில் அவர் அதிகளவில் ரன்களை குவிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை இறக்கினோம். ராகுல் டிராவிட்டும் அதே போட்டியில் களமிறங்கினார். இருவரும் அபாரமாக ஆடினர்.

அவர்களின் அபாரமான ஆட்டத்தை கண்ட அந்த நொடியே நமக்கு இனிமேல் இந்திய அணியில் நமக்கு இடமில்லை என்று எனக்கு தோன்றியது. அதனால் தான் உடனடியாக ஓய்வை அறிவித்துவிட்டேன் என மஞ்சரேக்கர் மனம் திறந்துள்ளார். அந்த அளவுக்கு கங்குலியும் டிராவிட்டும் திறமையானவர்கள் என மஞ்சரேக்கர் புகழ்ந்துள்ளார்.