மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் ஃபிட்ரியானி ஃபிட்ரியானியை எதிர்கொண்டார் சாய்னா.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 40 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 21-15, 21-14 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார். இது, ஃபிட்ரியானிக்கு எதிராக சாய்னா பெற்றுள்ள 4-ஆவது வெற்றியாகும்.

சாய்னா தனது அரையிறுதியில் ஹாங்காங்கின் யிப் பூய் யின்னை சந்திக்கிறார். முன்னதாக 8 முறை யிப்பை சந்தித்துள்ள சாய்னா, அதில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.