Sai Pranith won the Thailand Open grandfree gold badminton champion
சிங்கப்பூர் ஓபனைத் தொடர்ந்து தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியிலும் இந்தியாவின் சாய் பிரணீத் வாகைச் சூடினார்.
தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடைபெற்றது.
இதன் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியுடன் மோதினார்.
இதில், 17-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியை வீழ்த்தி வாகைச் சூடினார் சாய்.
சிங்கப்பூர் ஓபனைத் தொடர்ந்து இப்போது தாய்லாந்து ஓபனில் வாகை சூடியுள்ளார் சாய் பிரணீத்.
வெற்றி குறித்துப் சாய் பிரணீத் பேசியது:
"சரியான ஷாட்களை ஆடுவதிலேயே கவனம் செலுத்தினேன். இது மிகக் கடினமான ஆட்டம். ஒவ்வொரு கேமும் நீண்ட நேரம் நீடித்தது.
நான் மெதுவாக எனது ஆட்டத்தை வலுப்படுத்திக் கொண்டேன். இந்தப் போட்டியில் சாம்பியன் ஆகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என்று பேசினார்.
