Sachin sivak won the silver medal for Asian Junior Boxing

ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் தோற்று இந்தியாவின் சச்சின் சிவச் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடப்பு உலக இளையோர் சாம்பியனான சச்சின் சிவச், ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 49 கிலோ எடைப் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் சமந்தர் கோல்முரோடோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடந்தப் போட்டியில் சச்சின் கடைசியில் 0-5 என்ற கணக்கில் சமந்தரிடம் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதனால் தொடர்ந்து 2-வது முறையாக ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தங்கக் கனவு நிறைவேறவில்லை.

ஐந்து இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றதுடன் சேர்த்து இந்தியா இந்தப் போட்டியில் மொத்தம் ஆறு பதக்கங்களைப் பெற்றுள்ளது என்பது கொசுறு தகவல்.