sachin bought chennai kabbadi team

வரும் ஜூலை 28-ந்தேதி தொடங்க உள்ள புரோ கபடி லீக் போட்டியில் சச்சின்டெண்டுகல்கரின் சென்னை அணியும் களத்தில் இறங்குகிறது. இந்த அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ என சச்சின் பெயர்சூட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கிரிக்கெட், ஹாக்கி, பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுக்களில் லீக் போட்டிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கபடியில் லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுகடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

வரும் ஜூலை 28-ந்தேதி 5-வது புரோ கபடி லீக் போட்டி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு 8 அணிகள் கலந்து கொண்ட நிலையில், இந்த ஆண்டுகூடுதலாக 4 அணிகள் அதாவது மொத்தம் 12 அணிகள் களத்தில் குதிக்கின்றன. 11 மாநிலங்களில், 13 வாரங்களாக, 130 ஆட்டங்கள் நடக்க உள்ளது.

இந்த ஆண்டு கூடுதலாக தமிழ்நாடு, ஹரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய 4 அணிகள் கலந்து கொள்கின்றன. ஜே.எஸ்.டபில்யு குரூப், அதானி குரூப், ஜி.எம்.ஆர்.குரூப் மற்றும் சச்சின், தொழிலதிபர் என்.பிராசாத் ஆகியோர் என 4 அணிகளை வாங்கியுள்ளனர்.

இதில் ஹரியானா அணிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் என்றும், குஜராத் அணிக்கு குஜராத் பார்டியூன் ஜெயின்ட்ஸ் எனவும் பெயரிடப்பட்டது. தமிழக அணியை வாங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர்,தனது அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ என பெயரிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே கால்பந்து, பாட்மிண்டன் விளையாட்டுகளில் லீக்அணிகளை சொந்தமாக வாங்கியுள்ளார். இப்போது கபடி அணிக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் அணியின் பயிற்சியாளராக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன், தமிழக அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அனுபவம் மிக்கவரும் பெங்களூரு புல்ஸ் அணிக்காக விளையாடிய வீரர் அஜய்தாக்கூர், புனேரி பல்டன் ஆகியோர் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள். இவர்கள் தமிழக அணிக்காக களம் இறங்குகிறார்கள்.

மேலும், இளம் வீரர் அமித் ஹூடா, தடுப்பாட்டக்காரர் அணில் குமார், சி அருண், ஆகியோரும் தமிழக அணிக்காக வாங்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.