rohit sharma take new incarnation as a base ball player

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்திய அணியின் நிரந்தர இடம் பிடித்துள்ளார். சிறந்த அதிரடி வீரரான ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இவர் அடித்த 264 ரன்கள் தான் ஒருநாள் போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

கேப்டன் கோலி ஆடாத போட்டிகளில் ரோஹித் சர்மா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்படுகிறார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

அதிரடி கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா, பேஸ்பால் வீரராக அவதாரம் எடுக்க உள்ளார். இன்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடக்கும் சியாட்டில் மரைனர்ஸ் - தம்பா பே ரேய்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்துகொள்ளும் அவர் பந்தை முதலாவதாக (ஃபர்ஸ்ட் பிட்ச்) வீசி போட்டியை தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த கவுரவத்தை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற இருக்கிறார்.