Asianet News TamilAsianet News Tamil

இதுக்காகத்தான் இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்தேன்!! இனிமேல் பாருங்க என் ஆட்டத்த.. தெறிக்கவிடும் ஹிட்மேன்

மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஹிட்மேன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியிருக்கிறார்.
 

rohit sharma opinion about australia test series
Author
India, First Published Nov 13, 2018, 2:26 PM IST

மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஹிட்மேன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, அதன்பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒதுக்கப்பட்டார். 

rohit sharma opinion about australia test series

ரோஹித் சர்மா வேண்டுமென்றே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார் என்றும் மீண்டும் டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக ஒலித்தன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்சாகும் என்பதால், பவுன்ஸரை சிறப்பாக ஆடக்கூடிய ரோஹித் சர்மா கண்டிப்பாக அணியில் தேவை என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவரும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்தார். இந்நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடிக்கும் வகையில், தனது திறமையை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அதகளம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

rohit sharma opinion about australia test series

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசிய ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டி20 தொடர் மற்றும் பயிற்சி போட்டிகள் உள்ளன. டெஸ்ட் தொடருக்கு இன்னும் சில நாட்கள் எஞ்சியிருப்பதால் இப்போதைக்கு அதுகுறித்து பெரிதாக யோசிக்கவில்லை. எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தில் சிறப்பாக செயல்படுவதுதான் எனக்கு நல்ல பலனை அளித்திருக்கிறது. அந்த வகையில், டெஸ்ட் போட்டி தொடங்கும் சமயத்தில் அதுகுறித்து சிந்திக்கலாம் என்று கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருப்பது சிறப்பான உணர்வு என ரோஹித் தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் போட்டியில் ஆடும் நாளுக்காகத்தான் காத்திருந்ததாக ரோஹித் கூறியிருப்பது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அதகளம் செய்யப்போவதை மறைமுகமாக ரோஹித் வெளிப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios