ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் கடைசி போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு இருந்த கடைசி வாய்ப்பையும் தவறவிட்டுவிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ரோஹித் சர்மா, இந்த காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் 560 ரன்கள் அடித்திருந்தார். இந்த தொடரில் 40 ரன்கள் அடித்தால்  இந்த ஆண்டில் 600 ரன்கள் அடித்திருக்கலாம். மேலும் 82 ரன்கள் அடித்திருந்தால், இதுவரை ஒரு ஆண்டில் அதிக டி20 ரன்களை குவித்த கோலியின்(641 ரன்கள்) சாதனையை முறியடித்திருக்கலாம். 

ஆனால் முதல் போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்த ரோஹித், இரண்டாவது போட்டி கைவிடப்பட்டதால் பேட்டிங் ஆடும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து இன்று நடந்துவரும் கடைசி போட்டியில் 33 ரன்கள் எடுத்தால், இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் 600 ரன்களை எட்டும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கலாம். ஆனால் இன்றும் 23 ரன்களில் ஆட்டமிழந்து அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.

ஆனால் முதல் போட்டியில் 76 ரன்களை குவித்த தவான், ஒரு ஆண்டில் டி20 போட்டியில்  அதிக ரன்கள் அடித்த கோலியின் சாதனையை தவான்  முறியடித்தார். 2016ம் ஆண்டு கோலி அடித்த 641 ரன்கள் என்ற சாதனையை முதல் போட்டியிலேயே முறியடித்தார் தவான். இன்றைய கடைசி போட்டியில் 22 பந்துகளில் 41 ரன்களை குவித்த தவான், 689 ரன்களுடன் இந்த ஆண்டை பூர்த்தி செய்தார். 

2018ம் ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 689 ரன்களுடன் தவான் முதலிடத்திலும் 590 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் உள்ளனர்.