Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக தயார்!! கோலியை காலி செய்யும் ரோஹித்

இந்திய அணியின் நிரந்தரமான கேப்டனாக தான் தயாராக இருப்பதாக அதிரடியாக கூறி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா. 
 

rohit sharma is ready to take charge as captain of indian cricket team
Author
India, First Published Sep 29, 2018, 1:06 PM IST

இந்திய அணியின் நிரந்தரமான கேப்டனாக தான் தயாராக இருப்பதாக அதிரடியாக கூறி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் கோலிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு அளிக்கப்பட்டதால் கேப்டன் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி நன்றாக கேப்டன்சி செய்கிறார் என்ற பாராட்டை பல முன்னாள் ஜாம்பவான்களிடமிருந்து பெற்றார்.

rohit sharma is ready to take charge as captain of indian cricket team

ஏற்கனவே விராட் கோலியின் கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. பவுலர்களை பயன்படுத்தும் விதம், ஃபீல்டிங் செட்டப், கள வியூகம் ஆகியவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. கோலியின் கேப்டன்சி பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கிடைத்த வாய்ப்பை மீண்டுமொரு முறை சிறப்பாக பயன்படுத்தி தன்னை ஒரு கேப்டனாக மீண்டும் நிரூபித்துள்ளார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் இதுவரை எந்த தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை. இலங்கைக்கு எதிரான தொடர், நிதாஹஸ் டிராபி ஆகியவற்றை ரோஹித் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்நிலையில் தற்போது மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஆசிய கோப்பை தொடரையும் ரோஹித் தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது. 

rohit sharma is ready to take charge as captain of indian cricket team

ரோஹித் சர்மா களத்தில் சில நேரங்களில் சாதுர்யமாக நடந்துகொள்வது, பவுலர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம், வீரர்களை கையாள்வது என அனைத்திலுமே கோலியை விட சிறப்பாகவே செயல்படுகிறார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சிறப்பாக இருப்பதால், இந்திய அணியின் கேப்டன்சியை யார் மேற்கொள்வது என்ற விவாதம் எழ தொடங்கியுள்ளது. 

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித்திடம் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக தயாரா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

rohit sharma is ready to take charge as captain of indian cricket team

அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, நாங்கள் இங்கு நன்றாகத்தானே ஆடினோம். பிறகு ஏன் கூடாது? இந்திய அணியின் நிரந்தர கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை சிறப்பாக வழிநடத்த தயாராக உள்ளேன் என நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பதிலளித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios