rohit sharma century and kohli fifty against newzealand

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம் மற்றும் கோலியின் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். ஷிகர் தவான், 14 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானத்துடன் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகின்றனர்.

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 106 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில், இது ரோஹித் சர்மாவின் 15-வது சதமாகும். கேப்டன் கோலியும் அரைசதம் அடித்தார். ரோஹித் சர்மா மற்றும் கோலியின் அதிரடியால் இந்திய அணி, 33 ஓவர்களுக்கு 185 ரன்கள் என்ற வலுவான நிலையில் உள்ளது. 

2-வது விக்கெட்டுக்கு இருவரும் ஜோடி சேர்ந்து 150 ரன்களுக்கும் மேல் குவித்து விளையாடி வருகின்றனர். 2-வது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் நியூசிலாந்து அணி திணறிவருகிறது.

ரோஹித் சர்மா 101 ரன்களுடனும் விராட் கோலி 66 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.