rohit sharma captain for srilanka tri series
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்றுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இலங்கையின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் மார்ச் 6ம் தேதி தொடங்கி 18ம் தேதி நிறைவடைகிறது.
ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக விளையாடிவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கீப்பராக களமிறக்கப்படுகிறார்.

அதேபோல கேப்டன் விராட் கோலிக்கும் ஓய்வளிக்கப்படுகிறது. அதனால் கேப்டன் பொறுப்பை ரோஹித் வகிக்க உள்ளார். ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்படுகிறது.

அதனால் ரோஹித் சர்மா தலைமையில் இளம் அணி இலங்கை முத்தரப்பு தொடரில் களமிறங்குகிறது.
