இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியா - இலங்கை இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

அதில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பிறகு ரோஹித் சர்மா கூறியது:

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்போது துணை கேப்டனாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக இருந்தாலும், சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருப்பது முற்றிலும் வித்தியாசமானதாகும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.