Asianet News TamilAsianet News Tamil

எவ்வளவு பெரிய ஆளு பொல்லார்டு.. அவரையே அலறவிட்டுட்டாப்ளயே தம்பி!! வீடியோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரும் அதிரடி பேட்ஸ்மேனுமான பொல்லார்டையே ரிஷப் பண்ட் ஒரு ஷாட்டில் மிரட்டிவிட்டார். 
 

rishabh pant one handed sixer surprised west indies all rounder pollard
Author
India, First Published Nov 13, 2018, 3:03 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரும் அதிரடி பேட்ஸ்மேனுமான பொல்லார்டையே ரிஷப் பண்ட் ஒரு ஷாட்டில் மிரட்டிவிட்டார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று தொடர்களையுமே இந்திய அணி வென்று அசத்தியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை கைப்பற்றியது. 

இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில், கடைசி நேர அலட்சியமான ஆட்டத்தால் கடைசி பந்து வரை போட்டி சென்றது. இல்லையென்றால் முன்கூட்டியே எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். 

இந்த போட்டியில், ரோஹித் மற்றும் ராகுலின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இந்திய அணி இழந்துவிட்ட போதிலும், தவானுடன் சேர்ந்து பொறுப்புடனும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பண்ட், 38 பந்துகளில் 58 ரன்களை குவித்தார். 

rishabh pant one handed sixer surprised west indies all rounder pollard

பொதுவாகவே பல ரிஸ்க்கான ஷாட்டுகளை ஆடும் இளம் வீரர் ரிஷப் பண்ட், பொல்லார்டின் பந்தில் ஒற்றை கையில் அடித்த சிக்ஸர் பொல்லார்டை மிரளவைத்தது. பொல்லார்டு வீசிய 13வது ஓவரின் கடைசி பந்தை ரிஷப் பண்ட் தூக்கி அடிக்கும்போது பேலன்ஸ் இல்லாமல் ஒரு கை பேட்டிலிருந்து விடுபட்டது. எனினும் ஒற்றை கையால் அந்த ஷாட்டை ஃபினிஷ் செய்தார் ரிஷப் பண்ட். அதுவும் சிக்ஸருக்கு பறந்தது. ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை பார்த்து அதிரடிக்கு பெயர்போன பொல்லார்டே மிரண்டுபோனார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

One Handed Six From R Pant .....💪

A post shared by Cricketaslife (@cricketaslife) on Nov 11, 2018 at 9:07am PST

Follow Us:
Download App:
  • android
  • ios