Asianet News TamilAsianet News Tamil

அவனாவது பவுண்டரிதான் அடிப்பான்.. நான் சிக்ஸரா அடிப்பேன் தெரியும்ல!! வெஸ்ட் இண்டீஸை மிரட்டும் ரிஷப் பண்ட்

பிரித்வி ஷாவை தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை வெளுத்து வாங்குகிறார். 
 

rishabh pant batting well against west indies in second test
Author
Hyderabad, First Published Oct 13, 2018, 4:59 PM IST

பிரித்வி ஷாவை தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை வெளுத்து வாங்குகிறார். 

ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று 311 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி முதல் இன்னிங்ஸை முடித்தது. 

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் களமிறங்கினர். கடந்த போட்டியில் டக் அவுட்டான ராகுல், இந்த போட்டியில் நிதானமாக தொடங்கினார். இந்த போட்டியிலாவது சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் 4 ரன்களில் வெளியேறினார்.

rishabh pant batting well against west indies in second test

ஆனால் கடந்த போட்டியில் அபாரமாக ஆடிய பிரித்வி ஷா, இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சிதறடித்த பிரித்வி பவுண்டரிகளாக விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த பிரித்வி ஷா, 53 பந்துகளில் 70 ரன்களை குவித்த நிலையில், வாரிகன் வீசிய மிகவும் சாதாரணமான பந்தில் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதனால் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவரை தொடர்ந்து 10 ரன்களில் புஜாரா ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலி-ரஹானே ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்துவந்த நிலையில், கோலியின் விக்கெட்டை ஹோல்டர் வீழ்த்தினார். 45 ரன்களில் கோலி அவுட்டானார். 

rishabh pant batting well against west indies in second test

இதையடுத்து ரஹானேவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆடி ரன்களை சேர்த்துவருகிறது. ரஹானே நிதானமாக ஆட, ரிஷப் பண்ட் தனது பாணியில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகிறார். இருவருமே அரைசதம் கடந்தனர். பிரித்வி ஷாவை அவுட்டாக்கிய வாரிகனின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி மிரட்டினார் ரிஷப் பண்ட்.

rishabh pant batting well against west indies in second test

இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. 80 ரன்களை கடந்து ஆடிவரும் ரிஷப் பண்ட், சதத்தை நோக்கி ஆடிவருகிறார். கடந்த போட்டியில் 92 ரன்களில் அவுட்டான பண்ட், கடந்த போட்டியில் விட்டதை இந்த போட்டியில் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஹானேவும் 70 ரன்களை கடந்து ஆடிவருகிறார். இந்திய அணி 300 ரன்களை கடந்துவிட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios