ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி 359 ஓட்டங்கள் பெற்று முன்னிலையில் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி தனது முதல் இன்னிங்ஸில் 102.5 ஓவர்களில் 358 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸ் ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 72 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 75 ஓவர்களில் 226 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 132 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய குஜராத் அணியில் பி.கே.பன்சால் 73 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்க, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 79 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

காந்தி 55 ஓட்டங்களுடனும், ஹார்திக் படேல் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் சபேஸ் நதீம் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

குஜராத் அணி ஒட்டு மொத்தமாக 359 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.