குறைவான போட்டிகளில் விளையாடி 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி படைத்தார். சச்சின் டெண்டுல்கா் 259 போட்டிகளில் விளையாடி 10,000 ரன்கள் கடந்ததே தற்போது வரை சாதனையாக இருந்தது. இதனை இந்திய கேப்டன் விராட்கோலி முறியடித்துள்ளார். கோலி 205 போட்டிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். சச்சின், கங்குலி, டிராவிட், டோனியை தொடர்ந்து 10,000 ரன்களை கோலி கடந்தார். 

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து 2000 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்து வருகிறார். இதனால் இவர் கிரிக்கெட் உலகின் ரன் மிஷின் என்று அழைக்கப்படுகிறார். 

213 போட்டிகளில் 205 இன்னிங்ஸில் விளையாடி கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் 37 சதம் மற்றும் 48 அரை சதம் அடித்துள்ளார். 10,000 ரன்களை கடந்த பட்டியலில் கோலி 13-வது சர்வதேச வீரர் ஆனார். 2018-ம் ஆண்டில் 11-வது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி 100 ரன்களை கடந்த நிலையில் 4 அரைசதம், 5 சதம் உட்பட 970 ரன்களை குவித்துள்ளார். தற்போது 37-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். தற்போது இந்திய அணி 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.