rcb losing wickets and struggling to get runs
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து, புள்ளி பட்டியலில் முதலிடம் பெறும் முனைப்பில் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. டுபிளெசிஸிற்கு பதிலாக டேவிட் வில்லே சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிஃபிற்கு பதிலாக ஷர்துல் தாகூரும் கரண் சர்மாவிற்கு பதிலாக துருவ் ஷோராயும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக மெக்கல்லமும் பார்த்திவ் படேலும் களமிறங்கினர்.
5 ரன்களில் நிகிடியின் பந்துவீச்சில் மெக்கல்லம் அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய கோலியை 8 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார் ஜடேஜா. சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில், சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்த டிவில்லியர்ஸ், வெறும் 1 ரன்னில் வெளியேறினார். மந்தீப் சிங்கும் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மெக்கல்லம், கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து பெங்களூரு அணி திணறிவருகிறது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் அரைசதம் கடந்து ஆடிவந்த பார்த்திவ் படேலையும் 53 ரன்களில் ஜடேஜா வெளியேற்றினார்.
13 ஓவருக்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூரு அணி திணறிவருகிறது. 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
