Asianet News TamilAsianet News Tamil

அசாரூதீன் போட்ட போட்டில் அந்தர் பல்டி அடித்த சாஸ்திரி!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, எல்லா திசைகளிலிருந்தும் அட்டாக் செய்யப்படுகிறார். 
 

ravi shastri new statement in the result of azharuddin criticize
Author
England, First Published Sep 7, 2018, 2:27 PM IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, எல்லா திசைகளிலிருந்தும் அட்டாக் செய்யப்படுகிறார். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தற்பெருமை பேசுவதிலேயே குறியாக இருக்கிறார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி வெளிநாடுகளில் சோபிக்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. 

இதையடுத்து ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தற்போதைய இந்திய அணி தான் சிறந்த டிராவலிங் அணி என மார்தட்டுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடுகிறது என்று கருத்து தெரிவித்தார் ரவி சாஸ்திரி.

ravi shastri new statement in the result of azharuddin criticize

ரவி சாஸ்திரியின் கருத்தை அவரது நண்பரான கவாஸ்கரால் கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. ரவி சாஸ்திரிக்கு, டிராவிட் தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் பெற்ற வெற்றிகளை லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்தார் கவாஸ்கர். 

கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் சிறந்த அணி என கூறியிருக்கும் ரவி சாஸ்திரி, இதற்கு முன்னதாக வேறு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, குறிப்பிட்ட காலம் எதையுமே குறிப்பிடாமல், தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என கருத்து தெரிவித்திருந்தார். 

அதற்கு, அசாருதீன் தக்க பதிலடி கொடுத்திருந்தார். அதாவது, இதுதான் சிறந்த அணி என்று கூறுவதன் மூலம் ரவி சாஸ்திரி தன்னையும் தான் ஆடியபோது இருந்த அணியையும் அவரது திறமையையும் மதிப்பையும் அவரே குறைத்து கொள்கிறார் என கருத்து தெரிவித்திருந்தார். 

ravi shastri new statement in the result of azharuddin criticize

அசாருதீனின் பதிலடியில் இருந்த நியாயத்தை உணர்ந்த ரவி சாஸ்திரி, இந்த முறை அவர் ஆடிய காலத்திற்கு பிறகான இந்திய அணியை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசினார். அவர் ஆடிய காலத்தை விடுத்து, கடந்த 20 ஆண்டுகளில் இருந்த அணியை விட தற்போதைய அணிதான் சிறந்தது என தெரிவித்தார். ரவி சாஸ்திரியின் இந்த கருத்துக்கும் கவாஸ்கர், கங்குலி என வரிந்துகட்டி கொண்டு பதிலடி கொடுத்துவருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios