வெளிநாடுகளில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்துவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களை சந்தித்த ரவி சாஸ்திரியிடம், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆத்திரமடைந்துவிட்டார்.  

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்தாலும், இந்திய மண்ணில் மட்டுமே ஜொலிக்கும் இந்திய அணி, வெளிநாடுகளில் தொடர்ந்து மண்ணை கவ்விவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக வெளிநாட்டு தொடர்களில் தோல்விகளை தழுவிவருகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. முதலில் டி20 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி நாளை மறுநாள்(21ம் தேதி) நடக்கிறது. 

வெளிநாடுகளில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்துவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களை சந்தித்த ரவி சாஸ்திரியிடம், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆத்திரமடைந்துவிட்டார். 

இந்திய அணி தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்விகளை சந்திக்க காரணம் என்ன என்ற கேள்விக்கு கடுப்பான ரவி சாஸ்திரி, வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி மட்டும்தான் தோல்வி அடைவது போன்று கேள்வி கேட்கிறீர்கள். இந்திய அணி மட்டும்தான் வெளிநாடுகளில் தோல்விகளை சந்தித்ததா? மற்ற அணிகள் எல்லாமே வெற்றி பெற்று கொண்டேவா இருக்கின்றன? இன்றைய சூழலில் வெளிநட்டுத் தொடர்களில் பெரும்பாலான அணிகள் சிறப்பாக செயல்படவில்லை. சமீபத்தில் எந்த அணி வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டது என்று கூறுங்கள் பார்க்கலாம். அப்படியிருக்கையில், இந்தியாவை மட்டும் தொடர்ந்து கேள்வி கேட்பது ஏன்? என்று காட்டமாக பதிலளித்தார். 

சாஸ்திரி சார்.. நீங்க சொல்ற எல்லாமே கரெக்ட்தான். எந்த அணியும் வெளிநாட்டுல சரியா ஆடல என்பதன் மூலம் இந்தியாவும் சரியா ஆடல என்பதை மறைமுகமா ஒத்துக்குற நீங்க, அப்புறம் எதுக்கு இந்தியா தான் பெஸ்ட் டிராவலிங் டீம்னு சொன்னீங்க..? நீங்க அப்படி சொன்னதால்தானே இப்படிலாம் கேள்வி கேட்குறாங்க. பெஸ்ட் டிராவலிங் டீம்னு சொன்னீங்களே, ஆனால் எல்லா ஊர்லயும் மண்ணை கவ்வுறீங்களேனு கேட்கத்தானே செய்வாங்க. இனியாவது ஓவரா பில்டப் கொடுக்காம கொஞ்சம் அடக்கி வாசிங்க..