தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணி, வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று அசத்தியது.

வழக்கமாக பேட்டிங்கில் மட்டும் ஜொலிக்கும் இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல், குல்தீப் ஆகியோரின் சிறப்பான மிரட்டும் பவுலிங்கால் பவுலிங்கிலும் அசத்தி வெற்றியை பதிவு செய்தது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஒருநாள் தொடர் முழுவதும் கோலி, தவான் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஒரு போட்டியில் மட்டும் ரோஹித் சதமடித்தார். மற்றபடி மிடில் ஆர்டர்கள் தொடர்ச்சியாக சொதப்பினர். ஆனால் இந்திய பவுலர்களின் மிரட்டல் பவுலிங்கால் இந்தியா வென்றது.

இந்நிலையில், வழக்கமாக கேப்டன் விராட் கோலியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக முதுகெலும்புடன் கருத்து தெரிவித்துள்ளார். கோலியால் மட்டுமே இந்தியா வெற்றி பெறுவது போன்ற கருத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்ட ரவி சாஸ்திரி, இப்போதுதான் முதன்முறையாக உண்மையை கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க தொடர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு கோலி மட்டும் காரணமல்ல. இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சும் காரணம். எதிர்பாராத நேரங்களில் சரியான தருணத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பவுலர்கள் வழிவகுத்தனர் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.