Ranji Trophy Tamilnadu - Baroda teams face today Tamilnadu forced to win ...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் - பரோடா அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் - பரோடா அணிகள் மோதும் ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்றுத் தொடங்குகிறது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'சி' பிரிவில் இடம்பெற்றிருக்கும் தமிழக அணிக்கான கடைசி குரூப் சுற்று இதுவாகும்.
தற்போதைய நிலையில் தமிழகம் ஐந்து போட்டிகளில் கைப்பற்றிய 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
இந்தப் பிரிவில் ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், மும்பை அணிகள் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மத்திய பிரதேசத்தை எதிர்கொண்ட தமிழகம் வென்றிருக்க வேண்டியது. ஆனால், அந்த ஆட்டத்தை சமன் செய்தது. எனவே, தற்போது பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இதில் வெல்லும் பட்சத்திலேயே தமிழகம் நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறும்.
