Ramkumar improves 38 places in international tennis rankings

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 38 இடங்கள் முன்னேற்றம் கண்டு தனது டென்னிஸ் வரலாற்றில் 184-வது இடத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அன்டால்யா ஓபன் டென்னிஸ் போட்டியில் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து தனக்கு கிடைத்த 57 புள்ளிகளால் ராம்குமார் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்டால்யா ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆச்சரியமளிக்கும் வகையில், உலகின் 8-ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தினார். எனினும், காலிறுதியில் மூத்த வீரரான சைப்ரஸின் மார்கோஸ் பக்தாதீஸிடம் வீழ்ந்தார்.

ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் ராம்குமாருக்கு அடுத்தபடியாக, யூகி பாம்ப்ரி 222-வது இடத்திலும், பிரஜனேஷ் கன்னேஷ்வரன் 259-வது இடத்திலும், ஸ்ரீராம் பாலாஜி 291-வது இடத்திலும், சுமித் நாகல் 342-வது இடத்திலும் உள்ளனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா 21-வது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பூரவ் ராஜா 57-வது இடத்திலும், திவிஜ் சரண் 57-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 62-வது இடத்திலும், ஜீவன் நெடுஞ்செழியன் 90-வது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா 7-வது இடத்தில் தொடர்கிறார்.

மகளிர் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 274-வது இடத்திலும், கர்மன் கெளர் தன்டி 413-வது இடத்திலும் உள்ளனர்.