Rajini said congratulations to Sachin Sachin Tendulkars

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த படம் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்ன ரஜினிக்கு நன்றி தலைவா என்று சச்சின் நெகிழ்ந்தார்.

ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கம், ஏ,ஆர்.ரஹ்மான் இசை என இந்தப்படம் பட்டையை கிளப்ப தயாராக உள்ளது.

இந்த நிலையில் இப்படம் வெற்றி பெற சச்சினுக்கு ரஜினி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ரஜினி சொடுக்கியது:

டியர் சச்சின், சச்சின் - ஏ பில்லியன் டிரீம்ஸ் படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று ட்வீட் செய்துள்ளார்.

சச்சின் பதில் அளித்தது:

நன்றி தலைவா...! இந்தப் படத்தைத் தமிழில் ரசிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் என பரவசத்துடன் பதிலளித்துள்ளார்.