Rajasthan Royals team bought Jaidev Jettu for Rs.11.5 crore

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வீரர் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.11.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் ஆட்ரூ டையை ரூ.7.2 கோடிக்கு வாங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஜெயதேவ் உனத்கட்டும், ஆன்ட்ரூ டையும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர்.

உனத்கட்டின் அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக இருந்த நிலையில், சிஎஸ்கே, கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளின் போட்டிகள் காரணமாக அவரது விலை உயர்ந்தது.

அதன்படி, இந்திய வீரர் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.11.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் ஆட்ரூ டையை ரூ.7.2 கோடிக்கு வாங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

இதனிடையே, குறிப்பிடத்தக்க வகையில் நேபாளத்திலிருந்து முதல் கிரிக்கெட் வீரராக சந்தீப் லமிசானேவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.20 இலட்சத்துக்கு வாங்கியது.

ஆப்கன் வீரரான முஜீப் ஜர்தான் ரூ.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கௌதமை ரூ.6.2 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான்.

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.

இரண்டாவது நாள் ஏலத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகபட்சமாகவும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபும் செலவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது