பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் வாங்க மறுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆராய்ச்சிகளின் மூலம் மட்டுமே தாம் டாக்டர் பட்டத்தை பெறவிரும்புவதாக பெங்களூரு பல்கலைக்கழகத்திடம் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 52வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் ராகுல் டிராவிட் உள்பட 3 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

 ஆனால் கவுரவ டாக்டர் பட்டம் தமக்கு வேண்டாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் ஆராய்ச்சி செய்து அதன் மூலம் டாக்டர் பட்டம் பெறவே தாம் விரும்புவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.