rahane will be appoint as captain for rajasthan royals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரஹானே விரைவில் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித் கேப்டனாக இருந்தார். தற்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில், ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் விலகியுள்ளார். அவருக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் அவர் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஸ்மித் விரைவில், ராஜஸ்தான் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவார் என கூறப்படுகிறது. அவர் விலகிய பிறகு, ரஹானே கேப்டனாக நியமிக்கப்படுவார்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.