rahane fined rupees twelwe lakhs
மும்பைக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவிற்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, பட்லரின் அதிரடியான அபார பேட்டிங்கால் 18 ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்கவைத்துள்ளது.
இந்த போட்டியில் மும்பை அணிக்கு பந்துவீச அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தை ராஜஸ்தான் அணி எடுத்துக்கொண்டது. ஐபிஎல் விதிகளின் படி பந்துவீச அதிகநேரம் எடுக்கக்கூடாது. எனவே அந்த அணியின் கேப்டன் ரஹானேவிற்கு 12 லட்சம் ரூபாயை ஐபிஎல் நிர்வாகம் அபராதமாக விதித்துள்ளது.
