Rafael Federer slammed brisk todays game

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் மோதுகின்றனர்.

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற 3-ஆவது சுற்றில் ஃபெடரர் 7-6 (3), 7-6 (4) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை தோற்கடித்தார்.

இந்த ஆட்டத்தில் 12 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்ட ஃபெடரர், அதிகபட்சமாக 136 கி.மீ. வேகத்தில் சர்வீஸை அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் நடால் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை தோற்கடித்தார். இதன்மூலம் இண்டியன்வெல்ஸ் போட்டியில் 50-ஆவது வெற்றியைப் பெற்ற நடால், அடுத்ததாக ஃபெடரரை சந்திக்கிறார்.

இண்டியன்வெல்ஸில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்தார்.

இதன்மூலம் அவரிடம் முந்தைய போட்டிகளில் கண்ட தோல்விக்கு ஜோகோவிச் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜோகோவிச் தனது 4-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.