Pyongyang Winter Olympics German pair of gold medal winning new world record

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஃபிகர் ஸ்கேட்டிங் பிரிவில் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது ஜெர்மனியின் மாஸ்ஸாட் புருனோ - சாவ்சென்கோ அல்ஜோனா ஜோடி.

குளிர்கால ஒலிம்பிக் -23 போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 6-வது நாளாக நேற்று 7 பதக்கப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டியில் ஜெர்மனியின் புருனோ - அல்ஜோனா ஜோடி மொத்தமாக 235.90 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. இந்த ஜோடி ஃப்ரீ ஸ்கேட்டிங் பிரிவில் 159.09 புள்ளிகள் வென்று புதிய உலக சாதனை படைத்தது.

இதன்மூலமாக, கடந்த டிசம்பரில் நடைபெற்ற கிராண்ட் ஃப்ரீ ஃபைனல் போட்டியில் 157.25 புள்ளிகளை எட்டி அவர்கள் படைத்த சாதனையை, அவர்களை தகர்த்துள்ளது.

இதனிடையே, சீனாவின் ஹான் காங் - சுய் வென்ஜிங் ஜோடி 235.47 புள்ளிகளில் முதலிடத்தை நழுவவிட்டு வெள்ளியை கைப்பற்றியது.

கனடா ஜோடியான எரிக் ராட்ஃபோர்டு - மீகன் டுஹாமெல் 230.15 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது.