முதல்முறையாக ‘பி.வி.சிந்துவுக்குமகுடம்’….சயத் மோடி கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன்

லக்னோவில் நடந்த சயத் மோடி கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில்பங்ேகற்ற இளம் வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், லக்னோ நகரில் சயத் மோடி கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி நடந்து வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரும், சர்வதேச தரவரிசையில் 9-ம் இடத்தில் உள்ளவருமான பி.வி.சிந்துவை எதிர்கொண்டார் இந்தோனேசிய வீராங்கனையும், தரவரிசையில் 120-வது இடத்தில் உள்ள கிரிகோரியா மரிஸ்கா.

தொடக்கத்தில் இருந்தே ‘சர்வீஸ்’கள், பந்தை திருப்பி அனுப்புதல் ஆகியவற்றில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய சிந்து, புள்ளிகளை தொடர்ந்து பெற்று வந்தார்.மரிஸ்காவுக்கு ‘பிரேக்கிங்’ ஏதும் கொடுக்கவில்லை. சிந்துவின் அபாரமான‘ஷாட்’கள், ‘பிளேஸ்’களுக்கு முன் மரிஸ்கான்வின் ஆட்டம் எடுபடவில்லை.

ஒருதரப்பாக நடந்த ஆட்டத்தில் கிரிகோரியா மரிஸ்காவை 21-13, 21-14 என்ற‘செட்’களில் எளிதாக சாய்த்து முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றினார் சிந்து.

இந்த ஆண்டில் முதல் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற சிந்து, அதில் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

அரையிறுதியிலும் இந்தோனேசிய வீராங்கனை பிட்ராணி பிட்ராணியை 21-11, 21-19 என்ற செட்களில் தோற்கடித்து பைனலுக்கு சிந்து முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.