punjab taken ashwin for this IPL

11வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடந்து வருகிறது.

சூதாட்டப் புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த ஐபிஎல்லில் களமிறங்குகின்றன. 

சென்னை அணி இந்த முறையும் தோனியின் தலைமையில் களம் காண்கிறது. தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்களை சென்னை அணி தக்கவைத்தது. ஆனால், அஷ்வினை தக்கவைக்கவில்லை.

11வது சீசன் ஐபிஎல் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.

முதல் வீரராக ஷிகர் தவன் ஏலம் விடப்பட்டார். அடிப்படை விலையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஷிகர் தவனை அதிகபட்சமாக 5 கோடியே 40 லட்சத்திற்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. ஆனால், ஷிகர் தவன் ஏற்கனவே விளையாடிவந்த ஹைதரபாத் அணி, அதற்கான உரிமையை பயன்படுத்தி அதே விலைக்கு தக்கவைத்தது. இதையடுத்து ஷிகர் தவன் 5 கோடியே 40 லட்சத்திற்கு ஹைதராபாத்தால் வாங்கப்பட்டார்.

சென்னை அணியில் இருந்த தமிழக வீரர் அஷ்வினுக்கு 2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப் அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே அஷ்வினை எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. இறுதியாக 7 கோடியே 60 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது.