இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி புனே சிட்டி அணி வெற்றி பெற்றது.
புனேவில் ஞாயிற்றுக்கிழமை விருவிருப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் கோல் வாய்ப்பு புணே அணிக்கு கிடைத்தது.
இந்த ஆட்டத்தின் 41-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஜோனாதன் லூக்கா பாஸ் செய்த பந்தை மிகச் சரியாக கோலாக்கினார் சக வீரர் ஃபெர்ரைரா.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் புனே அணி 1-0 என முன்னிலை வகித்தது.
கொல்கத்தா அணி தனக்கான முதல் கோல் வாய்ப்பை நெருங்கும் முன்னரே, புனே அணி இரண்டாவது கோல் அடித்து கொல்கத்தாவை திணறடித்தது.
இந்த ஆட்டத்தின் 56-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் புனே வீரர் ரோட்ரிகஸ், அணியின் கோல் எண்ணிக்கையை 2-ஆக உயர்த்தினார்.
இறுதியாக, ஆட்டத்தின் 69-ஆவது நிமிடத்தில் கொல்கத்தாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் அந்த அணியின் இயான் ஹியுமே.
இறுதி வரை கொல்கத்தா அணிக்கு மேலும் ஒரு கோல் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், புனே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
