pujara record in test cricket
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் புஜாரா, தொடர்ச்சியாக 8 நாட்கள் விளையாடி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்த புஜாரா, டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்த மூன்றாவது இந்திய வீரர் பெருமையை பெற்றார்.

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் களமிறங்கிய புஜாரா, 7 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்தார். தொடர்ச்சியாக இரண்டாவது நாளான நேற்று விளையாடி சதமடித்தார். நேற்று முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்த புஜாரா, மூன்றாவது நாளான இன்றைய ஆட்டத்தையும் தொடர்ந்தார். 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவுட்டானார்.

முதல் போட்டியில் 5 நாட்கள், இரண்டாவது போட்டியில் 3 நாட்கள் என தொடர்ச்சியாக 8 நாட்கள் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை புஜாரா படைத்துள்ளார்.
சிறப்பாக ஆடி சதமடித்த கோலியும் ரோஹித் சர்மாவும் விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்சில் தற்போதுவரை 447 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, இலங்கையைவிட 242 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
