புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 38-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 47-42 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது புணேரி பால்டான் அணி

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 38-வது ஆட்டம் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதேல அசத்தலாக ஆடிய புணேரி பால்டான் அணி 14 நிமிடங்களில் 22-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிரதீப் நர்வாலின் ரைடால் சில புள்ளிகளைப் பெற்ற பாட்னா அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 13-25 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பாட்னாவை ஆல் அவுட்டாக்கிய புணேரி பால்டான், 28-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

புணேரி பால்டான் 30-வது நிமிடத்தில் 36-24 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியில் புணேரி பால்டான் 47-42 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

பாட்னா ரைடர் பிரதீப் நர்வால் தனது சிறப்பான ரைடின் மூலம் 19 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.

இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள புணேரி பால்டான் அணி, 4-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

அதேநேரத்தில் ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.