Pro Kabaddi telugu titans defeated by Patna Pirates ...
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 11-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 43-36 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 11-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி – தெலுங்கு டைட்டன்ஸ் இடையே ஐதராபாதில் நேற்று நடைபெற்றது.
முதல் பாதி ஆட்டநேர முடிவில் 23-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பாட்னா அணி, பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அசத்தலாக ஆடியதால் தொடர்ச்சியாக 11 புள்ளிகளை சேர்த்தது.
எனினும் கடைசிக் கட்டத்தில் ஓரளவு புள்ளிகளைச் சேர்த்த தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இறுதியில் பாட்னா பைரேட்ஸ் 43-36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
பாட்னா தரப்பில் ரைடர் பிரதீப் நர்வால் 12 புள்ளிகளையும், மானு கோயத் 10 புள்ளிகளையும் பெற்று தந்தனர்.
தெலுங்கு டைட்டன்ஸ் தரப்பில் ராகுல் செளத்ரி 12 புள்ளிகளை எடுத்தார்.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாட்னா அணி அபாரமாக ஆடியது. அதேசமயம் கேப்டன் ராகுல் செளத்ரியின் அபார ஆட்டத்தால் தெலுங்கு டைட்டன்ஸ் அணி இருமுறை சரிவிலிருந்து மீண்டது. எனினும் அந்த அணியால் வெற்றிப் பெற முடியவில்லை.
இதன்மூலம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக 5-வது தோல்வியை சந்தித்துள்ளது என்பது கொசுறு தகவல்.
