புரோ கபடி லீக்கில் டபாங் டெல்லியை 57-32 என வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியது.  

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று புனேவில் 3 போட்டிகள் நடந்தன. இன்று நடந்த முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸும் குஜராத் ஜெயிண்ட்ஸும் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 46-27 என குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸும் யு.பி யோதாஸும் மோதின. கடந்த போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற யு.பி யோதாஸ் அணி இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடியது. 41-30 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி யு.பி யோதாஸ் அணி வெற்றி பெற்றது.

IPL 2023: ஏலத்துக்கு முன் முதல் டிரேடிங்.. ஆர்சிபியிடமிருந்து ஆஸி., ஃபாஸ்ட் பவுலரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

இன்று நடந்த கடைசி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் டபாங் டெல்லியும் மோதின. இந்த போட்டியில் டபாங் டெல்லி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடியது ஜெய்ப்பூர் அணி. டபாங் டெல்லி அணியால் ஒரு கட்டத்தில் கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த டபாங் டெல்லி அணி அதன்பின்னர் படுமோசமாக ஆடி படுதோல்விகளை அடைந்துவருகிறது. இந்த போட்டியில் 57-32 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியிடம் படுதோல்வி அடைந்தது டபாங் டெல்லி அணி.

முதலில் இந்த சீனியர் வீரர்களை தூக்கி போடுங்க.. அப்பதான் டீம் விளங்கும்..! சேவாக் அதிரடி

புனேரி பல்தான் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இன்று டபாங் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2ம் இடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு புல்ஸ் 3ம் இடத்திலும், யு.பி யோதாஸ் அணி 4ம் இடத்திலும் உள்ளன. யு மும்பா அணி 5ம் இடத்தில் உல்ளது.