நீங்க ஜெயிச்சுட்டுத்தான் வந்திருக்கீங்க… கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பிரதமர் நம்பிக்கை…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இந்தியா திரும்பிய மிதாலி ராஜ் தலைமையிலான பெண்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, நீங்க ஜெயிச்சுட்டுத்தான் வந்திருக்கீங்க, தோற்கவில்லை என பாரட்டுத் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்திய பெண்கள் அணி  தோல்வியை சந்தித்தாலும், கடுமையாக போராடியது பல்வேறு தரப்பினரின் பராராட்டுதலைப் பெற்றுள்ளது.

இந்திய பெண்கள் அணி நேற்று முன் தினம் அதிகாலை நாடு திரும்பியது. மும்பை விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில்,  உலகக் கோப்பையில் பங்கேற்ற கிரிக்கெட் வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, நீங்கள் தோற்கவில்லை என்று வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், எண்ணம், உடல் மற்றும் செயல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பதற்கு யோகா உதவும் என்று மோடி கூறினார். பிரதமரை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி என்று வீராங்கனைகள் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, வீராங்கனைகள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட் ஒன்றினை பரிசாக அளித்தனர்.